சென்னை,ஏப்.29-
வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாமல்லபுரத்தில் நடந்தது. வன்னியர் சங்க மாநில தலைவர் ஜெ.குரு தலைமை தாங்கினார். ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் ராமதாஸ், அன்பு மணிராமதாஸ் கலந்து கொண்டனர். விழாவில் ராமதாஸ் பேசியதாவது:-
வன்னிய சமுதாயமும், தலித் சமுதாயமும் ஒன்று பட வேண்டும். அப்படி ஒன்று சேரும் போது அதன் வெற்றியை தடுக்க முடியாது.
உழைக்கிறமற்றவர்களுக்கு சோறு போடுகிற மக்கள் வன்னியர்கள். ஆனால் அவர்கள் கடைசி இடத்தில் உள்ளனர். இதற்கு யார் காரணம். இதை ஒவ்வொரு வன்னியனும் உணர்ந்தால் வன்னியன் கோட்டையில் இருப்பான். ஆண்டபரம்பரை மீண்டும் ஆள நிலைப்பதில் என்ன தவறு? எங்களை ஆளதகுதி இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?
வன்னியன் ஒவ்வொரு வரும் வன்னியனுக்கு வாக்களித்தால் 100 தொகுதிகளில் ஜெயிக்கலாம். வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வீட்டில் இருந்தே வெற்றி பெறலாம். மிகவும் பிற்படுத்தபட்ட மக்களுக் குக்காக எங்களை போல் யாராவது போராட்டம் நடத்தியது உண்டா? 21 உயிர்களை சுட்ட போது யாராவது கேட்டார்களா? எங்கே ஜாதி இல்லை. அனைத்து மாநிலங்களிலும் உள்ளது.
பெயருக்கு பின்னால் படையாச்சி, கவுண்டர் என்று ஜாதி பெயரை போடக்கூடாது என்று கூறியவன் நான்தானே. 60 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே வன்னியர். இதை நாங்கள கேட்கவில்லை என்றால் யார் கேட்பார்.
துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், செம்மலை கேட்பார்களா? 6 தொகுதிகளில் பா.ம.க.வால் அ.தி. மு.க. வெற்றி பெற்றது. ஆனால் ஒருவர் கூட எனக்கு நன்றி சொல்லவில்லை. நான் என்ன தீண்டதகாதவனா? வன்னியர்களுக்கு எதிராக நவீன தீண்டாமை நடக்கிறது.
20 சதவீதம் இடஒதுக் கீட்டில் 8 சதவீதம் கூட வன்னியர்களுக்கு இல்லை. எனவே தான் 20 சதவீத தனி ஒதுக்கீடு கேட்கிறோம். சுதந்திர இந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை அன்புமணி ராமதாஸ் செய்தார்.
ஆனால் அவரை தமிழ்நாட்டில் யாராவது பாராட்டினார்களா? நடிகர்களுக்கு பின்னால் செல்லும் இளைஞனை கேட்கிறேன். என்னுடன் சேர் உனக்கு அன்புமணி வழிகாட்டுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் அன்புமணி ராமதாஸ், வேல்முருகன் எம்.எல்.ஏ. உள்பட பலர் பேசினார்கள்.
கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு ஜூலை 28-ந் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது, அதற்கு முன்னர் ராமதாஸ் தலைமையில் ஒரு குழுவாக சென்று முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து மனு கொடுப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழா ஏற்பாடுகளை திருக்கச்சூர் ஆறுமுகம் எல்.எல்.ஏ செய்து இருந்தார். சுமார் 5 லட்சம் தொண்டர்கள் திரண்டு இருந்தனர். கடற்கரை எங்கும் மனித தலைகளாகவே காட்சி அளித்தது.
Dear frend Please visit my blog www.vanniyarsangam.blogspot.com
ReplyDelete